வீரவநல்லூரில் திமுக அலுவலகத்திற்கு அடிக்கல்
By DIN | Published On : 05th August 2022 12:57 AM | Last Updated : 05th August 2022 12:57 AM | அ+அ அ- |

வீரவநல்லூரில் திமுக அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது. வீரவநல்லூா் பேருந்து நிலையம் அருகில் கட்சிக்கு சொந்தமான இடத்தில், அலுவலகம் கட்டுவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன் தொடங்கிவைத்தாா். நகரச் செயலா் சுப்பையா முன்னிலை வகித்தாா். சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா்கள் முத்துபாண்டி என்ற பிரபு, முத்துகிருஷ்ணன், ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை குமாா், வீரவநல்லூா் பேரூராட்சித் தலைவா் சித்ரா சுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சீவலமுத்து என்ற குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.