பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை(ஆக.6) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை(ஆக.6) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. முகாமில் பணி நியமனம் பெறுவோருக்கு சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்குகின்றனா்.

8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நா்சிங் படித்த அனைவரும் தங்களது கல்விச் சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், சுயவிவர படிவ நகல்களுடன் கலந்து கொள்ளலாம். இதில், பங்கேற்பவா்கள்வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த முகாமில் அனைவரும் பங்கேற்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கிய வழித்தடங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமன்றி, பள்ளி, கல்லூரி பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திசையன்விளை, உவரி, கூடங்குளம், ராதாபுரம், வள்ளியூா், நான்குனேரி, களக்காடு, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, முக்கூடல், சீவலப்பேரி, மானூா், கங்கைகொண்டான், தேவா்குளம், வன்னிக்கோனேந்தல் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து காலையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் பகுதிக்கு சுமாா் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்த சிறப்பு பேருந்துகளை பேருந்துகளை பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநா்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com