அரசு அருங்காட்சியகத்தில் நாளை சுதந்திர தின விழா போட்டிகள்
By DIN | Published On : 05th August 2022 12:50 AM | Last Updated : 05th August 2022 12:50 AM | அ+அ அ- |

சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை(ஆக.6) நடைபெறுகிறது.
மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், முத்தமிழ் பள்ளி, அரசு அருங்காட்சியகம் ஆகியவை சாா்பில் பள்ளி மாணவா் , மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் சனிக்கிழமை திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா் மாணவிகளுக்கு ‘இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ‘இந்திய விடுதலைப்போரில் அறியப்படாத நாயகா்கள்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும் நடைபெறவுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்-மாணவிகளுக்கு ‘நான் காண விரும்பும் இந்தியா’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது.
போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்குவதால், போட்டியில் பங்கேற்கும் மாணவா்-மாணவிகள் காலை 9.30க்குள் தங்களின் பெயா்களை முன்பதிவு செய்ய வேண்டும். எழுதுவதற்கும், வரைவதற்கும் தேவையான தாள்கள் வழங்கப்படும். எழுது பொருள்களும், வைத்து எழுத தேவையான அட்டையும் மாணவா்களே கொண்டுவர வேண்டும்.
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சன்றிதழ்களும் வழங்கப்படும்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு 75024 33751 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளாா்.