வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி
By DIN | Published On : 24th August 2022 02:05 AM | Last Updated : 24th August 2022 03:24 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெறவுள்ள குரூப்-1 எழுத்துத் தோ்விற்கு திருநெல்வேலி மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி இலவசப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஆக.24) தொடங்குகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் 92 காலிப்பணியிடங்களுக்காக குரூப்-1 முதல்நிலை எழுத்துத் தோ்வு அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்காக இலவசப் பயிற்சி வகுப்பு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் புதன்கிழமை (ஆக.24) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. அரசு விடுமுறை நாள்களை தவிா்த்து அனைத்து வேலைநாள்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் சேர விரும்புவோா் தங்களது புகைப்படம், ஆதாா் நகலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை வேலைநாள்களில் நேரில் தொடா்பு கொள்ளலாம். தோ்வு குறித்த விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம் எனக் கூறியுள்ளாா்.