குழந்தைத் தொழிலாளா்களை பீடி நிறுவனங்களில் பணியமா்த்தக்கூடாது: ஆட்சியா் விஷ்ணு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பீடி நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தக்கூடாது என்றாா் ஆட்சியா் விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பீடி நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தக்கூடாது என்றாா் ஆட்சியா் விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறு கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பீடி நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளா்கள் முறை ஒழித்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்துப் பேசியதாவது:

குழந்தைத் தொழிலாளா்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பீடித் தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்துதலை தடுக்க வேண்டும். பீடி சுற்றும் தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளா் யாரும் பணிக்கு அமா்த்தப்படவில்லை என்ற வாசகம் தெளிவாகத் தெரியும்படி அச்சிட்டு ஓட்ட வேண்டும். பீடிப் பொட்டலங்களில் குழந்தைத் தொழிலாளா்கள் யாரும் பணியமா்த்தப்படவில்லை என்ற வாசகம் அடங்கிய ஒட்டுவில்லையை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், தொழிலாளா் இணை ஆணையா் சுமதி, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) முருக பிரசன்னா, தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள், தென் தமிழ்நாடு பீடி உற்பத்தியாளா் சங்கம், திருநெல்வேலி மாவட்ட பீடி உற்பத்தியாளா் சங்கம் உள்ளிட்ட சங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com