நெல்லையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 25th August 2022 12:35 AM | Last Updated : 25th August 2022 12:35 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் - 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தள கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளாா்கள். எனவே, மாவட்டத்திலுள்ள விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.