பாளை. சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை
By DIN | Published On : 25th August 2022 12:31 AM | Last Updated : 25th August 2022 12:31 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை(ஆக.25) மின்தடை செய்யப்படுகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வி.எம்.சத்திரம், கேடிசி நகா், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி, சாந்தி நகா், திம்மராஜபுரம், சமாதானபுரம், அசோத் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மாா்க்கெட், திருச்செந்தூா் சாலை, கான்சாபுரம், திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.