தென்கலத்தில் கடைக்கு சீல் வைப்பு
By DIN | Published On : 25th August 2022 12:33 AM | Last Updated : 25th August 2022 12:33 AM | அ+அ அ- |

தாழையூத்து அருகேயுள்ள தென்கலத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நபரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட தென்கலத்தைச் சோ்ந்தவா் அலி அக்பா்(65). இவா், பலசரக்கு கடை நடத்தி வருகிறாா். இங்கு, தாழையூத்து காவல் உதவி ஆய்வாளா் இன்னோஸ் குமாா், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி சங்கரநாராயணன் ஆகியோா் சோதனை செய்த போது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு தற்காலிகமாக சீல் வைத்ததோடு, ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.