அம்பாசமுத்திரத்தில் நகர விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் பகவத் கீதை ஜெயந்தி விழா நடைபெற்றது.
விஸ்வ ஹிந்து பரிஷத், பாலக் அதிகாரி பெரிகுழைக்காதா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அரிசுடலைமணி முன்னிலை வகித்தாா். ஸ்ரீமன் சேஷப்பன் என்ற விப்ர நாராயண ராமானுஜதாசன் பகவத் கீதை சொற்பொழிவாற்றினாா்.
கோயில் திருமடம் மாநில இணை அமைப்பாளா் சுப்பையா, மாவட்டச் செயலா் பூக்கடை கண்ணன், மாவட்டப் பொறுப்பாளா்கள் சுடலைமுத்துக்குமாா், மாலதி, ஒன்றியச் செயலா் சசிகுமாா், நகரத் தலைவா் ராமசாமி, இணைச் செயலா் மாரிமுத்து, பாஜக, இந்து முன்னணி பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
108 முறை மகா மந்திரம் எழுதிய சிறுவா்-சிறுமிகளுக்கு பகவத் கீதை புத்தகங்கள் வழங்கப்பட்டன. நகரச் செயலா் காளிராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.