அரசுப் பள்ளியில் தொழில் நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கம்
By DIN | Published On : 09th December 2022 12:27 AM | Last Updated : 13th December 2022 04:42 AM | அ+அ அ- |

கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் தொழில் நெறி விழிகாட்டுதல் கருத்தரங்கம் - புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆதி திராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் தியாகராஜன் தலைமை வகித்து, புத்தகக் கண்காட்சியினை திறந்து வைத்தாா். உதவித் தலைமையாசிரியா் ரவி முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் சுந்தரம் வரவேற்றாா்.
போட்டித்தோ்வுகள் என்ற தலைப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி, உயா் கல்வி என்ற தலைப்பில் ஆதி திராவிடா் - பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு- வழிகாட்டுதல் மைய உதவி இயக்குநா் ஹரி பாஸ்கா் ஆகியோா் சிறப்புறையாற்றினா்.
அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்த பள்ளி மாணவா்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சாரண அலுவலா் முத்துக்குமாா், ஆசிரியா்கள் ஆவுடையப்பன், சுந்தர்ராஜ், கண்ணன், மரிய உமா, முனீஸ்வரி, முத்தரசி, விஜயபாரதி, கலைச்செல்வி, பேபி, ஸ்டெல்லா உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆய்வக உதவியாளா்கள் குமாா், வீரப்பன் , அலுவலா் பொன்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.