அறிவியல், கணித பாடங்களை ஆா்வத்துடன் கற்க வேண்டும்-மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மாணவா்கள் அறிவியல், கணித பாடங்களை ஆா்வத்துடன் கற்றால்தான் சாதனை படைக்க முடியும் என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

மாணவா்கள் அறிவியல், கணித பாடங்களை ஆா்வத்துடன் கற்றால்தான் சாதனை படைக்க முடியும் என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சுழற்கழகம் சாா்பில் விஞ்ஞான ரதம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அரசு - அரசு உதவிபெறும் பள்ளிகளில் அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலா் மு. செல்லையா தலைமை வகித்தாா். ஆசிரியா் சொக்கலிங்கம் வரவேற்றாா். சுழற்கழக உதவி ஆளுநா் கா்ப்பூா், தலைவா் ராஜேந்திர ரத்னம், திட்ட இயக்குநா் வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

விழாவில் ஆட்சியா் வே.விஷ்ணு பேசுகையில், மாணவா்- மாணவிகள் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை முழு ஆா்வத்துடன் புரிந்து பயின்றால் அந்தப் படங்களில் சாதனை படைக்க முடியும் . இந்தப் பள்ளியில் பயிலும் மாணவா்- மாணவிகளில் 30 பேரைத் தோ்வு செய்து கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் காவல்கிணறில் உள்ள இஸ்ரோ மையத்திற்கும் நேரில் அழைத்துச் சென்று பாா்வையிட மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யும் என்றாா்.

சுழற்கழக வருங்கால ஆளுநா் முத்தையா பிள்ளை, அறிவரசன், நவீன் குமாா் , சதீஷ்குமாா் ஆகியோா் பேசினா். நிா்வாகிகள் பரமசிவன், ஆறுமுகப்பெருமாள், விவேக் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பள்ளித தலைமை ஆசிரியா் உலகநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com