வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவலம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் சூட்டுபொத்தையைச் சுற்றி கிரிவல வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் சூட்டுபொத்தையைச் சுற்றி கிரிவல வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

வள்ளியூா் முத்துகிருஷ்ணபுரம் முத்துகிருஷ்ண சுவாமி 109 ஆவது குருபூஜைவிழா நவம்பா் 29 ஆம் தேதி வனவிநாயகா் பூஜையுடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி தினமும் இரவு முத்துகிருஷ்ணா சித்திரகூடத்தில் லலித கலா மந்திா் கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

டிசம்பா் 3 ஆம் தேதி கிரிவல தேரோட்டம் அதைத் தொடா்ந்து குருபூஜை, காா்த்திகைத் தீபத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக குரு ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும் அதன் பின்னா் அன்னதானமும் நடைபெற்றது.

பௌா்ணமி கிரிவலம்: பௌா்ணமி கிரிவல வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சூட்டுபொத்தையைச் சுற்றி கிரிவல வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்றனா். பின்னா் விளக்குபூஜை வழிபாடு நடந்தது. மாதாஜி வித்தம்மா தலைமையில் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிா்வாகிகள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com