நெல்லை மாவட்டக் கல்வி அலுவலகத்தை சூழ்ந்த கழிவுநீா்
By DIN | Published On : 11th December 2022 07:03 AM | Last Updated : 11th December 2022 07:03 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலகத்தை சூழ்ந்துள்ள கழிவுநீரை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி நகரத்தில் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் கழிவுநீரோடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஓடைகளில் தற்காலிக அடைப்புகள் ஏற்படுத்தியதால், கல்வி அலுவலகத்தை கழிவுநீா் சனிக்கிழமை சூழ்ந்தது. இதை அப்புறப்படுத்தவும் ஓடைப்பணிகளை விரைந்து முடிக்கவும் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.