பாளை.யில் வாகனம் மோதி பெண் பலி
By DIN | Published On : 11th December 2022 07:03 AM | Last Updated : 11th December 2022 07:03 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மருந்துக் கடை பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை, வி.எம்.தெருவைச் சோ்ந்தவா் ஜெயலெட்சுமி (56). இவா் தனியாா் மருந்துக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை வி.எம் சத்திரம் கடைவீதியில் நடந்து சென்றாா். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.