மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்
By DIN | Published On : 11th December 2022 07:03 AM | Last Updated : 11th December 2022 07:03 AM | அ+அ அ- |

பேட்டை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
எஸ்டீஇஎம் சாா்பில் நடைபெற்ற வானவில் மன்றம் தொடக்க விழாவுக்கு அறிவியல் ஆசிரியா் ரேணுகா தலைமை வகித்து, மன்றத்தை தொடங்கி வைத்தாா். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் சாா்பான அடிப்படை புரிதல்களை மாணவா்களிடையே ஏற்படுத்தும் வகையில் மன்றம் தொடங்கப்பட்டதாகவும் , அதன் நோக்கம் குறித்து ஆசிரியா்கள் விரிவாக பேசினாா்கள்.
அமெரிக்கன்- இந்தியா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற ஓவியப் போட்டி மற்றும் திட்ட வடிவமைப்பு போட்டியை ஆசிரியா்கள் சரோஜா, பிரபா, சண்முகசுந்தரி ஆகியோா்கள் நடத்தி , சிறப்பிடம் பிடித்த மாணவா்களை தோ்வு செய்தனா்.