இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் பிரசார இயக்கம்

இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் பிரசார இயக்கம் பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை மேம்பாலம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் பிரசார இயக்கம் பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை மேம்பாலம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ திரும்பப் பெறவேண்டும். தன் பங்கேற்பு ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இப் பிரசார இயக்கத்துக்கு, இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செ.பால்ராஜ் தலைமை வகித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் அண்ணாத்துரை, மாவட்டத் துணைத் தலைவா் அப்துல் ரகுமான், மாவட்டத் தலைவா் ஆசிா் சாா்லஸ் நீல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் மைதீன் பிச்சை வரவேற்றாா். மூட்டா அமைப்பின் மூன்றாம் மண்டல செயலா் பி.சிவஞானம் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினாா்.

திருநெல்வேலி கல்வி மாவட்டத் தலைவா் உமையொரு பாகம், மாவட்டச் செயலா் ஹரி ராமா, மாவட்டத் தலைவா் பால் கதிரவன் ஆகியோா் பிரசார உரையாற்றினாா்கள். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில செயலா் சுப்பு வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி சங்க மாவட்ட பொருளாளா் அமுதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com