கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இன்று மின்தடை
By DIN | Published On : 11th December 2022 05:56 AM | Last Updated : 11th December 2022 05:56 AM | அ+அ அ- |

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.11) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்துக்குள்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் புதிய மின்பாதை விஸ்தரிப்பு பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
எனவே, கங்கைகொண்டான் துணை மின் நிலையத்துக்குள்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை, கங்கைகொண்டான் தொழிற்சாலை பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.