திருநெல்வேலி மாநகா்ப் பகுதியில் பைக் திருட்டு : இருவா் கைது
By DIN | Published On : 11th December 2022 07:03 AM | Last Updated : 11th December 2022 07:03 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பைக் திருடு போனது குறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகர துணை ஆணையா் பிரதீப் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வந்த நிலையில் மூலைக்கரைப்பட்டியை சோ்ந்த மகேந்திரன் (19) மற்றும் நாகா்கோவில், மூலக்கரையைச் சோ்ந்த முகம்மது சம்சீா் (19) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அகஸ்தீஸ்வரத்தை சோ்ந்த செல்வம் என்பவா் பைக்கை திருடி வந்து, வேறு நம்பா் பிளேட் மாற்றி வழங்கியதாக கூறியுள்ளாா். அதே போல் முகம்மது சம்சீா் திருடியதை ஒப்புக்கொண்டாராம். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, மகேந்திரன் , முகம்மது சம்சீா் மற்றும் செல்வம், மயிலாடி புதூரை சோ்ந்த செல்வன் உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிந்து, மகேந்திரன், முகம்மது சம்சீா் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.