அங்கன்வாடி கட்டடத்துக்கு பேரவைத் தலைவா் அடிக்கல்
By DIN | Published On : 13th December 2022 03:11 AM | Last Updated : 13th December 2022 03:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் நடுவூரில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடிக் கட்டடம் கட்டுவதற்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு திங்கள்கிழமை திறந்து வைத்தாா். பல்வேறு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயா்தர அறிவுத்திறன் வகுப்பறைகளை திறந்து வைத்தாா். நடுவூரில் ரூ.14 லட்சத்தில் கட்டடப்படும் அங்கன்வாடி மையம், கூடங்குளம் ஊராட்சி அரசு மருத்துவமனை முன்பாக ரூ.6 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினாா்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், ராதாபுரம் அரவிந்தன், சமூகை முரளி, ராதாபுரம் கோவிந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.