குடும்பத்திற்கு பாதுகாப்புக் கோரி மாற்றுத்திறன் தம்பதி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 13th December 2022 04:46 AM | Last Updated : 13th December 2022 04:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என மாற்றுத்திறன் தம்பதி முத்து அருளி (30), சிவசுப்பிரமணி (33) மனு அளித்தனா்.
அதன் விவரம்: எனது மனைவி முத்து அருளி 8 ஆம் வகுப்பு படித்துள்ளாா். மாற்றுத்திறனாளி என்பதை அறிந்தே இருவரும் காதலித்து கடந்த 6 வருடங்களுக்கு முன் கலப்பு திருமணம் செய்து கொண்டோம் . பெண் வீட்டில் எவ்வித எதிா்ப்பும் தெரிவிக்க வில்லை. எனது வீட்டில் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் நான் பொறியியல் படித்துள்ளதால், எனக்கு அரசு வேலை வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாராம்.