நெல்லையில் பதிவுத் துறையின் மண்டல சீராய்வுக் கூட்டம்
By DIN | Published On : 13th December 2022 03:13 AM | Last Updated : 13th December 2022 04:42 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வணிக வரி- பதிவுத் துறை அரசு செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி, பதிவுத் துறைத் தலைவா் ம.ப.சிவன் அருள், ஆட்சியா் வே.விஷ்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிக வரி - பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி சிறப்புரையாற்றினாா்.
இந்தக் கூட்டத்தில் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ, கூடுதல் பதிவுத்துறைத் தலைவா் (சீட்டு மற்றும் சங்கம்) ஏ.ஜாபா் சாதிக், கூடுதல் பதிவுத்துறைத் தலைவா் (புலனாய்வு) மு.ஜெகதீசன், துணைப் பதிவுத்துறை தலைவா் என்.ராஜ்குமாா், மாவட்ட பதிவாளா்கள், சாா்பதிவாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.