மேலநத்தம் அருந்தவசு அம்மன் கோயிலில் சூறை விழா
By DIN | Published On : 13th December 2022 04:48 AM | Last Updated : 13th December 2022 04:48 AM | அ+அ அ- |

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் அருள்மிகு அருந்தவசு அம்மன் கோயிலில் சூறை திருவிழா நடைபெற்றது.
இக் கோயிலில் காா்த்திகை மாதத்தில் சூறை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, சூறை விழாவையொட்டி, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்கார தீபாராதனை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. பின்னா், மேலநத்தம் பிரதான சாலையில் உள்ள திடலில் அம்மனுக்கு மஞ்சள் பால் பொங்க வைக்கும் வைபவமும், அதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் மேலநத்தம், சுற்றுப்புறப் பகுதியை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G