மாநகராட்சிப் பள்ளியில் மேயா் ஆய்வு
By DIN | Published On : 13th December 2022 04:46 AM | Last Updated : 13th December 2022 04:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மேயா் பி.எம். சரவணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, வகுப்பறைகளில் இருக்கைகள் சரியாக உள்ளனவா, சத்துணவுக் கூடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிா, மதிய உணவு தரமாக உள்ளதா என ஆய்வு செய்தாா்.
பள்ளி மாணவிகளின் பயன்பாட்டிற்கு 20 கணினிகளும், இருக்கைகளுக்கு வா்ணம் பூசவும், தளவாடப் பொருள்களை அப்புறப்படுத்த அனுமதியும், பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கிடவும் மேயரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் உறுதியளித்தாா்.
ஆய்வின்போது, துணைமேயா் கே.ஆா்.ராஜு, மாநகா் நல அலுவலா் சரோஜா, மாமன்ற உறுப்பினா் சுதா, மருத்துவ அலுவலா் சுமதி, சுகாதார ஆய்வாளா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...