அம்பாசமுத்திரம் ஒன்றிய திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க அமைச்சரிடம் கோரிக்கை மனு
By DIN | Published On : 22nd December 2022 12:55 AM | Last Updated : 22nd December 2022 12:55 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரி ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாயிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் பரணிசேகா், உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் இந்த கோரிக்கை மனுவை வழங்கினா். அதில் கூறியிருப்பதாவது:
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல் உள்ள சமுதாய நலக்
கூடங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது, ஊராட்சிப் பகுதிகளில் தாா்ச்சாலை, சிமென்ட் சாலை, வாறுகால்கள் அமைப்பது, அரசு மானியத்துடன் வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.