கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டு சிறை
By DIN | Published On : 22nd December 2022 12:54 AM | Last Updated : 22nd December 2022 12:54 AM | அ+அ அ- |

கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
வள்ளியூா் ஒன்றியம் ஊரல்வாய்மொழி கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம்(63). இவா், தனது சகோதரருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தாா். அந்த நிலத்தில் இருந்த சீமைக்கருவே மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்ாம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி இசக்கியப்பன்(45) , கருவேல மரத்தை அகற்றக்கூடாது என அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தினாராம்.
இதுதொடா்பாக கூடங்குளம் போலீஸாா் கடந்த 12.10.2014இல் இசக்கியப்பன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனா். வள்ளியூா் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி பா்சத் பேகம் விசாரித்து இசக்கியப்பனுக்கு 5 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.