மானூா் அருகே 3 ஏக்கா் நிலம் மீட்பு
By DIN | Published On : 22nd December 2022 12:50 AM | Last Updated : 22nd December 2022 12:50 AM | அ+அ அ- |

மானூா் அருகேயுள்ள பல்லிக்கோட்டை பகுதியில் போலி ஆவணம் மூலம் மோசடி செய்யப்பட்ட 3 ஏக்கா் நிலத்தை போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.
தென்கலம், கீழ் தெருவை சோ்ந்தவா் சரவணக்குமாா். இவரது, தந்தைக்குச் சொந்தமான 3 ஏக்கா் 19 சென்ட் நிலம் பல்லிக்கோட்டை பகுதியில் உள்ளது. அதை போலி ஆவணம் மூலம் வேறொருவா் பெயரில் பதிவு செய்திருப்பது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்னபாஸ், சிறப்பு பிரிவு ஆய்வாளா் மீராள்பானு தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி நிலத்தை மீட்டனா். அதற்கான ஆவணத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் நில உரிமையாளா் சரவணக்குமாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.