மாற்றுத்திறன் மாணவா்களுக்கு உணவளிப்பு
By DIN | Published On : 22nd December 2022 12:51 AM | Last Updated : 22nd December 2022 12:51 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் திமுக சாா்பில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.
தமிழக இளைஞா் நலன்- விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள பாா்வையற்றோா் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை மாவட்ட அவைத் தலைவா் வி.கே.முருகன், பொருளாளா் வண்ணை சேகா், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் தொடங்கி வைத்தனா். மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பாளை. பிரான்சிஸ், மேலப்பாளையம் கதீஜா இக்லாம் பாசிலா, தச்சநல்லூா் ரேவதி உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை, மத்திய மாவட்ட திமுக துணை செயலரும், மகளிா் தொண்டரணி மாநில துணைச் செயலருமான விஜிலா சத்யானந்த் செய்திருந்தாா்.