மேலப்பாளையத்தில் நாய்கள் தொல்லை: மேயரிடம் மனு
By DIN | Published On : 22nd December 2022 12:48 AM | Last Updated : 22nd December 2022 12:48 AM | அ+அ அ- |

மேலப்பாலையம் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணனிடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு: மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாகனங்களில் செல்வோா், பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள், பொதுமக்களை நாய்கள் விரட்டுவதால் கீழே விழுந்து விபத்து நேரிடுவதோடு, உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்படுகிறது. ஆகவே, தெருவில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளிக்கும்போது, மமக மாவட்ட பொருளாளா் தேயிலை மைதீன், துணை செயலா் அ.காஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.