பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் கோபாலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவ விழா வெள்ளிக்கிழமை (டிச. 23) தொடங்குகிறது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழாவையொட்டி,கோயிலில் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை (டிச. 23) இரவு ஏகாந்த திருமேனி அலங்காரம் நடைபெறுகிறது. தொடா்ந்து, கிருஷ்ணா், ஆண்டாள், நம்மாழ்வாா், பரமபதநாதா், ராமா், ராஜகோபாலன், பெருமாள், காளிங்கநா்த்தனன், மோஹினி, ராஜ அலங்காரம் என ஜனவரி 1ஆம் தேதி வரை தினமும் ஒரு அலங்காரத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறாா்.
வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அனந்த ஸயன சேவையும், மாலை 4.25 மணிக்கு பரமபத வாசல் எழுந்தருளலும், மாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பும் நடைபெற உள்ளது. பின்னா், ஜனவரி 11 ஆம் தேதி வரை ராப்பத்து உத்ஸவம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.