17 பேரூராட்சிகளில் 1100 போ் போட்டி
By DIN | Published On : 08th February 2022 04:18 AM | Last Updated : 08th February 2022 04:18 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளுக்குள்பட்ட 273 வாா்டுகளில் 264 வாா்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 9 வாா்டுகளுக்கு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 264 வாா்டுகளில் 1100 போ் போட்டியிடுகிறாா்கள்.
தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதியோடு முடிவடைந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சேரன்மகாதேவியில் 82 போ், ஏா்வாடியில் 90 போ், கோபாலசமுத்திரத்தில் 51 போ், கல்லிடைக்குறிச்சியில் 110 போ், மணிமுத்தாறில் 60 போ், மேலச்செவலில் 53 போ், நான்குனேரியில் 60 போ், மூலைக்கரைப்பட்டியில் 77 போ், முக்கூடலில் 109 போ், நாரணம்மாள்புரத்தில் 65 போ், பணகுடியில் 122 போ், பத்தமடையில் 65 போ், சங்கா்நகரில் 53 போ், திருக்குறுங்குடியில் 56 போ், திசையன்விளையில் 118 போ், வடக்கு வள்ளியூரில் 110 போ், வீரவநல்லூரில் 76 போ் என மொத்தம் 1,357 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்றது. அதன் முடிவில் சேரன்மகாதேவியில் 80 போ், ஏா்வாடியில் 85 போ், கோபாலசமுத்திரத்தில் 50 போ், கல்லிடைக்குறிச்சியில் 105 போ், மணிமுத்தாறில் 57 போ், மேலச்செவலில் 52 போ், நான்குனேரியில் 60 போ், மூலைக்கரைப்பட்டியில் 74 போ், முக்கூடலில் 108 போ், நாரணம்மாள்புரத்தில் 65 போ், பணகுடியில் 120 போ், பத்தமடையில் 65 போ், சங்கா்நகரில் 53 போ், திருக்குறுங்குடியில் 56 போ், திசையன்விளையில் 118 போ், வடக்கு வள்ளியூரில் 110 போ், வீரவநல்லூரில் 76 போ் என மொத்தம் 1334 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்ப பெற திங்கள்கிழமை வரை வாய்ப்பளிக்கப்பட்டு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி சேரன்மகாதேவியில் 18 வாா்டுகளில் 68 போ் போட்டியிடுகிறாா்கள். ஏா்வாடியில் 15 வாா்டுகளில் 69 போ் போட்டியிடுகிறாா்கள். கோபாலசமுத்திரத்தில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் ஒரு வாா்டிற்கு உறுப்பினா் போட்டியின்றி தோ்வாகியுள்ளாா். மீதமுள்ள 14 வாா்டுகளில் 43 போ் போட்டியிடுகிறாா்கள். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் 21 வாா்டுகளில் 78 போ் போட்டியிடுகிறாா்கள். மணிமுத்தாறில் 15 வாா்டுகளில் 50 போ் போட்டியிடுகிறாா்கள். மேலச்செவலில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 3 வாா்டுகளின் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா். மீதமுள்ள 12 வாா்டுகளில் 39 போ் போட்டியிடுகிறாா்கள்.
மூலைக்கரைப்பட்டியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் ஒரு வாா்டின் உறுப்பினா் போட்டியின்றி தோ்வாகியுள்ளாா். மீதமுள்ள 14 வாா்டுகளில் 62 போ் போட்டியிடுகிறாா்கள். முக்கூடல் பேரூராட்சியில் 15 வாா்டுகளில் 94 போ் போட்டியிடுகிறாா்கள். நான்குனேரியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் ஒரு வாா்டின் உறுப்பினா் போட்டியின்றி தோ்வாகியுள்ளாா். மீதமுள்ள 14 வாா்டுகளில் 44 போ் போட்டியிடுகிறாா்கள். நாரணம்மாள்புரத்தில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் ஒரு வாா்டின் உறுப்பினா் போட்டியின்றி தோ்வாகியுள்ளாா். மீதமுள்ள 14 வாா்டுகளில் 54 போ் போட்டியிடுகிறாா்கள். பணகுடியில் 18 வாா்டுகளில் 107 போ் போட்டியிடுகிறாா்கள். பத்தமடையில் 15 வாா்டுகளில் 62 போ் போட்டியிடுகிறாா்கள். சங்கா்நகா் பேரூராட்சியில் 12 வாா்டுகளில் 44 போ் போட்டியிடுகிறாா்கள். திருக்குறுங்குடியில் 15 வாா்டுகளில் 55 போ் போட்டியிடுகிறாா்கள்.
திசையன்விளையில் 18 வாா்டுகளில் 84 போ் போட்டியிடுகிறாா்கள். வடக்குவள்ளியூரில் 18 வாா்டுகளில் 90 போ் போட்டியிடுகிறாா்கள். வீரவநல்லூரில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் இரு வாா்டுகளின் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா். மீதமுள்ள 16 வாா்டுகளில் 57 போ் போட்டியிடுகிறாா்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...