நெல்லை நீதிமன்றத்தில் வழக்குகள் நேரடி விசாரணை தொடக்கம்
By DIN | Published On : 08th February 2022 04:18 AM | Last Updated : 08th February 2022 04:18 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குகளின் நேரடி விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததால் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைபெறவில்லை. பல வழக்குகளில் இணையம் மூலமே விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் நேரடி விசாரணை திங்கள்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றங்கள், கூடுதல் அமா்வு நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைபெற்றது. இதையொட்டி பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை, நான்குனேரி கிளை சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை போலீஸாா் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவந்து ஆஜா் படுத்தி , மீண்டும் சிறையில் அடைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...