தைப்பூசத் திருவிழா: நெல்லையப்பர் கோயிலில் கொடியேற்றப்பட்டது

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தைப்பூசத் திருவிழா: நெல்லையப்பர் கோயிலில் கொடியேற்றப்பட்டது


திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இம்மாதம் 12ஆம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. கொடி ஏற்றி முடித்ததும் கொடிமரத்தின் முன்பு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நமச்சிவாய முழக்கத்துடன் சுவாமியை வழிபட்டனர்.

தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இம்மாதம் 12ஆம் தேதி திருநெல்வேலி ஊர் பெயர்க் காரணத்தை விளக்கும் 'நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்ச்சி கோயில் சுவாமி சன்னதி முன்பு முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. 

திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர். திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்திற்கு பின்பு நடைபெற்ற மகாதீபாராதனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com