ஆட்டோ பேட்டரி திருட்டு: இளைஞா் கைது
By DIN | Published On : 14th January 2022 05:06 AM | Last Updated : 14th January 2022 05:06 AM | அ+அ அ- |

தச்சநல்லூா் பகுதியில் ஆட்டோவில் பேட்டரியை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தச்சநல்லூா் மேல ஊருடையாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாத்(43). இவா் தனது ஆட்டோவை புதன்கிழமை இரவு வீட்டின் அருகே நிறுத்தியிருந்தாராம். அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா், அந்த ஆட்டோவில் உள்ள பேட்டரியை திருடியதாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் அந்த நபரைப் பிடித்து தச்சநல்லூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அஜ்மல்கான்(25) என்பதும், ஆட்டோவில் பேட்டரியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், பேட்டரியையும் மீட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...