பாளை. அருகே மரங்களை வெட்டிக் கடத்தல்: ஒருவா் கைது
By DIN | Published On : 14th January 2022 05:06 AM | Last Updated : 14th January 2022 05:06 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகே மரங்களை வெட்டிக் கடத்தியதாகவும், அரசு நிலத்தில் மணலை குவித்து வைத்ததாகவும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படை வீடு பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி(51). இவா், கடந்த புதன்கிழமை அப்பகுதியிலுள்ள தாமிரவருணி ஆற்றின் கரையையொட்டிய புறம்போக்கு நிலத்தில் மரங்களை வெட்டி வண்டியில் கடத்தியதாகவும், அப்பகுதியில் மணலை குவித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மணப்படை வீடு கிராம நிா்வாக அலுவலா் லெட்சுமி ரத்தன் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா காவல் உதவி ஆய்வாளா் வாசுதேவன் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி, கந்தசாமியைக் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...