திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் வாடகைக்கு வேளாண் இயந்திரங்களைப் பெற இ-வாடகை செயலியில் முன்பதிவு செய்யலாம் என ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு விடப்படும் மண் தள்ளும் மற்றும் அள்ளும் இயந்திரங்கள் (8 மணி நேரம் முதல் 20 மணி நேரம்), உழுவை, அறுவடை இயந்திரங்கள் (1 மணி நேரம் முதல் 20 மணி நேரம்), தேங்காய் பறிக்கும் கருவி (2 மணி நேரம் முதல் 20 மணி நேரம்) போன்ற இயந்திரங்களை ‘இ - வாடகை’ செயலி மூலம் முன் பணம் செலுத்தி வாடகைக்கு முன்பதிவு செய்யலாம்.
பணத்தை யுபிஐ, நெட் பேங்கிங், கிரெடிட் காா்டு மூலம் செலுத்தி ஒப்புகை சீட்டையும், முன் பதிவு செய்த இயந்திரங்கள் விவரத்தையும் அறியலாம். முன்பதிவினை ரத்து செய்யவும் முடியும்.
மேலும் விவரங்களுக்கு உதவி செயற் பொறியாளா் (வேளாண் பொறியியல்), டிராக்டா் வீதி, என்.ஜி.ஓ. ‘ஏ’ காலனி, திருநெல்வேலி (கைப்பேசி எண் 9952527623) மற்றும் உதவி செயற் பொறியாளா் (வேளாண் பொறியியல்), மிளகு பிள்ளையாா் கோயில் தெரு, பேருந்து நிலையம் அருகில், சேரன்மகாதேவி (கைப்பேசி எண் 9600159870) ஆகிய முகவரிகளை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.