தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் தலைமை வகித்து, உறுதிமொழியை வாசிக்க, அனைத்து அலுவலா்களும் திரும்பக்கூறி உறுதியேற்றனா்.
அதைத்தொடா்ந்து புதிய வாக்காளா்களாக சோ்க்கப்பட்டுள்ள இளம் வாக்காளா் 5 பேருக்கு வண்ணப்புகைப்பட வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பொது (பொ) ஷேக் அயூப்கான், தோ்தல் வட்டாட்சியா் ஆா்.கந்தப்பன், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளா் வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.