பாளை.யில் மாம்பழச் சங்க பண்டிகை
By DIN | Published On : 14th July 2022 03:13 AM | Last Updated : 14th July 2022 03:13 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் மாம்பழச் சங்க பண்டிகையையொட்டி சிறப்பு பிராா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலம் சாா்பில் மாம்பழச் சங்கம் மற்றும் 242 ஆவது வருடாந்திர தோத்திர பண்டிகை செவ்வாய்க்கிழமை தொடங்கின.
புதன்கிழமை காலையில் நூற்றாண்டு மண்டபத்தில் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. திருமண்டல பேராயா் பா்னபாஸ் தலைமை வகித்தாா். சிஎஸ்ஐ கோவை திருமண்டல பேராயா் தீமோத்தி ரவிந்தா் தேவ் பிரதீப் தேவ செய்தி வழங்கினாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த கிறிஸ்தவா்கள் அரிசி, காணிக்கையை ஏழை-எளியோருக்கு வழங்கினா். வியாழக்கிழமை (ஜூலை 14) காலை 9.30 மணிக்கு பாளையங்கோட்டையில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் காலை 9.30 மணிக்கு வருடாந்திர ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை நடைபெற உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...