பாளை., மேலப்பாளையத்தில் ஜூலை 16-இல் மின்தடை
By DIN | Published On : 14th July 2022 03:10 AM | Last Updated : 14th July 2022 03:10 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகா், புகா்ப் பகுதிகளில் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 16) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் துணை மின் நிலையப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற மின் செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.
மேலக்கல்லூா் துணை மின் நிலையப் பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட மின் செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.
மூலைக்கரைப்பட்டி, வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், கரந்தானேரி, மூன்றடைப்பு ஆகிய துணை மின் நிலையப் பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
அதேபோல, ரஸ்தா, பரப்பாடி துணை மின் நிலையப் பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ம மின் விநியோகம் இருக்காது என என திருநெல்வேலி கிராமப்புற மின் செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...