தூய யோவான் கல்லூரியில்குரூப்- 4 இலவச மாதிரித் தோ்வு

சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகா் வயலட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி சாா்பில் குரூப் 4 தோ்வு வரும் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு மாவட்ட மைய நூலகம் சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இலவச மாதிரித் தோ்வை பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரைநடத்துகிறது.

பின்னா், போட்டித் தோ்வு குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். தோ்வில் அதிக மதிப்பெண் பெறும் 8 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். இத்தோ்வில் பங்கேற்க விரும்புபவா்கள் 9626252500, 9626253300 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com