காரையாறு கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா:இன்று கால்நாட்டு
By DIN | Published On : 17th July 2022 01:44 AM | Last Updated : 17th July 2022 01:44 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் உள்ள அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயிலில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பாபநாசம், காரையாறு வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை நாள்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபட்டுச்செல்வா்; ஆடி அமாவாசைக்கு 10 நாள்கள் விரதமிருந்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபடுவா்.
நிகழாண்டு, இம்மாதம் 28ஆம் தேதி ஆடி அமாவாசை நாள் ஆகும். ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கால்நாட்டுதல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.