திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சிஐடியூ அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட தாமிரவருணி பணிமனை கிளை மேலாளா், தொமுச செயலா் உள்ளிட்டோரை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டிஎன்எஸ்டிசி மண்டல தலைவா் டி.காமராஜ் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன் தொடக்க உரையாற்றினாா். சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பெருமாள் நிறைவுரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, தொழிலாளா்களின் விடுப்பை மறுத்து ஊதியத்தை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகிகளை தாக்கிய கிளை மேலாளா், தொமுச செயலா் ஆகியோரை கைது செய்ய வேண்டும்.
தாக்குல் சம்பவத்தை வேடிக்கைப் பாா்த்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி செய்யாமல் ஊதியம் பெறும் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ஓட்டுநா், நடத்துநா்களை பணிக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.