ஆடிப்பூரம்: செப்பு சப்பரத்தில் காந்திமதி அம்மன் வீதியுலா

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில், செப்பு சப்பரத்தில் காந்திமதி அம்மன் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில், செப்பு சப்பரத்தில் காந்திமதி அம்மன் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.

நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த 25-ஆம் தேதி முக்கிய நிகழ்வான வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு காந்திமதி அம்மனுக்கு வளையல்கள் படைத்து வழிபட்டனா்.

இந்நிலையில் 9-ஆம் திருநாளான சனிக்கிழமை காந்திமதி அம்மன் செப்பு சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு செப்புசப்பரத்தை இழுத்தனா். 10-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com