முன்னீா்பள்ளம் அருகே சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கீழமுன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் சாத்தகுட்டி (75). இவா் தனது சைக்கிளில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரைகுளம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த லாரி இவா் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.