நெல்லை மாவட்டத்தில் புல் வெட்டும் கருவிக்கு 75 சதவீத மானியம்
By DIN | Published On : 31st July 2022 07:12 AM | Last Updated : 31st July 2022 07:12 AM | அ+அ அ- |

மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் 2020-21 இன் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் 75 சதவீத மானியத்தில் புல் வெட்டும் கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் 2020-21 இன் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் 75 சதவீத மானியத்தில் புல் வெட்டும் கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற, பயனாளிகள் குறைந்தபட்சம் 2 மாடுகள், 0.25 ஏக்கா் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினா்கள் இத்திட்டத்தின் கீழ் குழுவாக பயன்பெற குறைந்தபட்சம் ஒரு மாடு மற்றும் 0.25 நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்கவேண்டும். சுய உதவிக் குழு உறுப்பினா்கள் முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்யப்படுவாா்கள். பயனாளி, கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் இதே போன்ற திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயனடைந்தவராக இருத்தல் கூடாது.
தோ்வு செய்யப்படும் பயனாளிகள் 25 சதவீத ஜிஎஸ்டி சோ்த்து பங்குத் தொகையினை செலுத்துவதற்கு தயாா் நிலையில் இருத்தல் வேண்டும். 30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடா், பழங்குடி இனத்தைச் சாா்ந்தவராக இருத்தல் வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவரால் தோ்வு செய்யப்படும் பயனாளிகள் பட்டியலே இறுதியானது.
எனவே, மேற்படி திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரைஅணுகி விவரங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.