அரசு அருங்காட்சியகத்தில் கல்வெட்டு எழுத்துப் பயிற்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தில் பழந்தமிழ் எழுத்துகளை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கல்வெட்டு எழுத்துப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தில் பழந்தமிழ் எழுத்துகளை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கல்வெட்டு எழுத்துப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு, அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தாா். மதுரை மாவட்டக் காப்பாட்சியா் மருது பாண்டியன் இப்பயிற்சி வகுப்பை நடத்தினாா். பேராசிரியா் கட்டளை கைலாசம் மற்றும் கல்வெட்டு ஆா்வலா் மாரியப்பன் வாழ்த்திப் பேசினா்.

பயிற்சி வகுப்பில் தமிழ் பிராமி என அழைக்கப்படும் தமிழி எழுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. அதில், கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சியும், மறுகால்தலை பகுதியில் உள்ள தமிழி எழுத்துகளை பாா்வையிடும் கள ஆய்வுப் பயிற்சியும் நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கல்லூரி மாணவா்கள் , ஆசிரியா்கள் என எராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com