குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 31st July 2022 07:14 AM | Last Updated : 31st July 2022 07:14 AM | அ+அ அ- |

களக்காடு அருகே போக்சோ வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
களக்காடு, தேவநல்லூா் கீழுரைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் என்ற மணி மகன் மணிகண்டன் (26). இவா், அப்பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவுப்படி, நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...