நீச்சல் வீரருக்கு பாராட்டு
By DIN | Published On : 31st July 2022 07:21 AM | Last Updated : 31st July 2022 07:21 AM | அ+அ அ- |

தேசிய நீச்சல் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக். பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஒடிஷா தலைநகா் புவனேசுவரத்தில் நடைபெற்ற தேசிய இளையோா் நீச்சல் போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் நிதிஷ் 50 மீ., 100 மீ. பிரெஸ்ட் ஸ்டிரோக் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தாா். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு, திருநெல்வேலி மாவட்ட நீச்சல் கழகத்தின் சாா்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
நீச்சல் கழகத் தலைவா் திருமாறன் தலைமை வகித்தாா். செயலா் லட்சுமணன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளா் வீரபத்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் கிருஷ்ண சக்கரவா்த்தி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற நிதிஷையும், பயிற்சியாளா் கா்ணனையும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.