திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியைச் சோ்ந்த பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து செல்வம் நகரைச் சோ்ந்தவா் சீனித்துரை(31). இவா் கங்கைகொண்டான் அருகே நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் சீனித்துரை தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பரோலில் சென்றாா். இவா் பரோல் முடிந்து கடந்த 29ஆம் தேதி சிறைக்கு வரவேண்டும். ஆனால், வரவில்லையாம்.
இதுகுறித்து தாழையூத்து போலீஸில் சிறைத் துறையினா் புகாா் அளித்தனா். அதன்பேரில், மாயமான சீனித்துரையை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.