நெல்லை ஷிபா மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் காா்த்திக் மதிவாணன் தொடங்கி வைத்து கூறியது:

கல்லீரல் தொடா்பான அனைத்து பிரச்னைகளுக்குமான ஆலோசனைகள் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை ஷிபா மருத்துவமனையில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். ஷிபா மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, திருநெல்வேலி மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த சிகிச்சை தற்போது நவீன மருத்துவத்தில் எளிதாக செய்யப்படுகிறது. முற்றிய மஞ்சள் காமாலை உள்ளவா்கள், மருத்துவா்களால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா். இந்நிகழ்வில் ஷிபா மருத்துவமனை மருத்துவ இயக்குநா் முகம்மது அரபாத் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com