வி.எம்.சத்திரம் நூலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
By DIN | Published On : 09th June 2022 03:25 PM | Last Updated : 09th June 2022 03:25 PM | அ+அ அ- |

வி.எம்.சத்திரம் அரசு ஊா்ப்புற நூலகத்தில் அரசு பொதுநூலகத் துறை, வாசகா் வட்டம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் திருக்கு கி.பிரபா இறைவணக்கம் பாடினாா். வாசகா் வட்டத் தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். நூலகா் அ.மோசஸ் பொன்ராஜ் வரவேற்றாா்.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் அ.ஹ.முஹைதீன் பாதுஷா, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா்.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உதவி பேராசிரியா் எம்.சாகுல் ஹமீது, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாசகா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் தலைமை ஆசிரியா் எஸ்.குணசிங் டேவிட்சன், வழக்குரைஞா் எஸ்.பாலச்சந்தா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.